Thursday, July 10, 2008

அண்ணே! நீங்க மனசு வைச்சா இந்த பெட்ரோல் விலையை குறைச்சுடலாம்.அண்ணே



எங்கள் வீட்டிற்கு காலை உணவுக்கு ஒரு நாளைக்கு தேவையான முட்டைகள் இரண்டு.
தெரு முனையில் உள்ள திருநெல்வேலி அண்ணாச்சி பலசரக்கு கடையிலிருந்து(ஒரு டஜன் முட்டைகள் ஒரு வாரத்திற்கு காணாது எனவே) இரண்டு டஜன் முட்டைகள் வாங்குவது வழக்கம்.

வருட ஆரம்பத்தில் ஒரு டஜன் முட்டை ரூபாய் 10 க்கு கொடுத்து வந்த அண்ணாச்சி திடீரென ரூபாய் 15 கேட்டார்.முனங்கி கொண்டு கொடுத்த எனக்கு அடுத்த அடுத்த மாதங்களில் ஒரு டஜன் முட்டையின் விலையை 30 ரூபாய்க்கு என்று சொன்னதும் மயக்கமே வந்து விட்டது.


" என்ன அண்ணாச்சி இது அநியாயமாய் இருக்கு இப்படி விலை ஏற்றி கொண்டே செல்கிறீர்கள்". இது கடவுளுக்கே அடுக்குமா/.
அண்ணாச்சியின் பதில் காதில் நாராசமாய் வந்து விழுகிறது.
" நான் என்ன செய்ய சார் முட்டை வியாபாரி விலையை ஏற்றி விட்டார் அதை நான் உங்க கிட்த்தானே வாங்கமுடியும்,
எங்க புள்ளை குட்டிகள் உயிர் வாழா வேண்டாமா/ சொல்லு தம்பி என்றார்.

இதற்கிடையில் முட்டைவிலை ஏறியதால் சின்ன அளவில் முட்டை உற்பத்தி நிலையங்கள் நலிந்து போக, பெரிய பெரிய முட்டை பார்ம்கள் வைத்ததுதான் சட்டம் என ஆகிவிட்டது.
அவர்கள் முட்டை விலையை தங்கள் இஷ்டத்துக்கு ஏற்றி, உள்ளூர் டிஸ்ட்ரிபூட்டர்களுக்கு தர அது மறைமுகமாக அண்ணாச்சி மூலம் எங்கள் தலையில் வந்து விழுந்தது.

டிசம்பர் மாதம் முட்டை டஜன் 40 ரூபாய்க்கு எகிறியது காரணம் கேட்டால் கிறிஸ்துமஸ் கேக்கு செய்வத்ற்கு முட்டையின் தேவை அதிகம் என சொல்லப் பட்டது.

எங்கள் தெரு மகா சபை ஒரு ஞாயிறன்று கூடியது. இதற்கு கடிவாளம் போட என் ஆலோசனை ஏற்கப்படது ஒரு மனதாக.அதன் படி இன்றிலிருந்து ஒவ்வொருவரும் தினம் முட்டை உபயோகத்தை பாதியாக குறைத்து ,இரண்டு டஜன் முட்டை வாங்காமல் தேவையான அளவு அதாவ்து 2 அல்ல்து 3 முட்டை மட்டும் வாங்க ஆரம்பித்தோம்.

அண்ணாச்சி கடையில் முட்டைகளின் இருப்பு நாளாக நாளாக அதிகமாகிக் கொண்டே போனது.
டிஸ்டிரிபூட்டர் கிட்டங்கிகளில் முட்டைகள் மலை போல் குவியத் தொடங்கியதால் முட்டை உற்பத்தியாளர்களிடம் சரக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.ஆனால் கோழிக்கு இந்த விவகாரம் தெரியாமல் அது பாட்டுக்கு " என் கடன் பணி செய்து கிடப்பதே " என முட்டையிட்டுக் கொண்டெ இருந்தது .உற்பத்தியாளர் இடப் பற்றாக் குறையால் தவியாய் தவித்தார். டிஸ்ட்ரிபூட்டரின் வேலை ஆட்களோ, வேலை இல்லாமல், டல்லடிக்கு வியாபரம் என் வருவோர் போவோரிடம் சொல்லி சொல்லி ஓய்ந்து விட்டார்கள். அண்ணாச்சியோ முட்டை வியாபாரம் "டல்லுங்கோ" என் கன்னத்தில் கைவைத்து புலம்ப ஆரம்பித்து விட்டார்.


முட்டைகள் காலம் கடந்து கெட்டுப் போனாதால் அதை பூமியில் குழி தோண்டி புதைத்தார்கள் பண்னை உற்பத்தியாளர்கள்.ஆனாலும் விலை குறைக்க மனமில்லை.
நாங்களும் "விடாக் கண்டன் கொடாக் கண்டனாக ஒரு நாளின் தேவையில் பாதி அளவே முட்டை வாங்கிவர வேறு வழியில்லாமல் உற்பத்தியாளர்,டிஸ்ட்ரிபூட்டர்,மளிகைக்கடை அண்ணாச்சி மூவரும் உச்சி மாநாடு நடத்தி முட்டையின் விலையை பழைய ரூபாய் 10 க்கு/டஜன் கொண்டு வந்தார்கள்.

இந்த தாரக மந்திரத்தை நாம் பெட்ரோல் உபயோகத்திலும் கடைப் பிடிக்கவேண்டும்.
நம் கார்களுக்கோ,இருசக்கர வாகனங்களுக்கோ பெட்ரோல்/டீசல் பெட்ரோல் நிலையங்களில் போடும் போது தேவையான அளவில் பாதி மட்டும் போடவேண்டும்.வண்டியின் டாங்கை முழுவதும் நிரப்பாமல் பாதிஅள்வே நிரப்பவேண்டும்.வண்டியின் உபயோகத்தையும் குறைக்கவேண்டும்.

இப்படி செய்தால் பெட்ரோல் நிலையங்களில் பூமியின் அடியில் புதைக்கபாட்டுள்ள பெரிய டாங்குகள் காலியாகாச் சூழ்நிலை உருவாகும்.
பெட்ரோல் சேமிப்பு கிடங்குகளில் இடப் பற்றாக் குறை ஏற்படும்
பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்கள் கச்சா எண்ணேய் இருப்பு அதிகமாகிக் கொண்டெ போகும்
கச்சாஎண்ணெய் டாங்கர் கப்பல்களின் நெருக்கத்தால் துறை முகங்கள் திக்கு முக்காடும்.




முட்டை விலை விசயத்தில் நடந்து மாதிரி அதிசயம்
பெட்ரோல்/டீசல் விலை விசயத்திலும் நடக்கும்
அது உங்கள் கையில்.

பெட்ரோல் உப்யோகத்தை குறைப்போம்.
பெரிசுகளின் கொட்டத்தை அடக்குவோம்.

80 comments:

Anonymous said...

This is a nice blog. I like it!

Anonymous said...

Well, all I can say is. Im hungry.

Anonymous said...

Alla hu akhbar!!!

said...

நல்லா இருக்குங்க உங்க ஐடியா...

said...

ஆனால் முட்டை அழுகும் பொருள் !
இந்த தத்துவம் அழுகாத பெட்ரோலுக்கு பொருந்துமா ?]
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்

said...

Vijay you are very talented. I love this blog, beatufully illustrated in Tamil with right pictures. If everyone follows this mode of buying fuel, the prices will slash. Keep it up. I'm Paulraj, your father's friend.
check mine here.
http://www.blogger.com/profile/13730074175574085102

Anonymous said...

மிக அருமையான பதிவு.நல்ல கதை ஓட்டம்.

கண்ணன்

said...

கேட்க நல்ல இருக்கு... நடக்கிற காரியமா இது?

said...

விஜய்

ஒரு சமூக பிரச்சனைக்கு அக்கறையுடன் தீர்வு சொல்ல முயன்றிருக்கிறீர்கள்.

இது பிரச்சினைக்கு ஒரு முழுமையான தீர்வல்ல என்றாலும் "சிக்கனமாக இருப்பது" எப்போதுமே நன்மை தரும் என்ற அளவில் இதை ஏற்றுக் கொள்ளலாம்.

பாராட்டுக்கள்.

said...

சத்தியமாக இது ஒரு நல்ல யோசனைதான்.
ஆனால் முட்டை விஷயத்தில் நடந்தது போல உடனடியாக பலன் கிடைக்காது. பலன் தெரிய கொஞ்ச நாட்கள் ஆகலாம்.
ஒருவேளை, பெட்ரோல், டீசல் போன்றவற்றின் உபயோகம் குறைவதால், விற்பனை நிலையங்கள் கம்மியாக வாங்க ஆரம்பித்து, இதனால் சுத்திகரிப்பு நிலையங்களும் கம்மியாக இறக்குமதி செய்ய ஆரம்பித்து, அதன்மூலம் விலையை குறையவிடாமல் பார்த்துக்கொண்டாலும், இறக்குமதி குறைவதால் நாட்டுக்கும், பொருளாதாரத்திற்கும் நன்மையே.
எனவே, கட்டாயம் பலன் அளிக்கும் யோசனைதான் இது.

நண்பர்கள் அனைவருக்கும் இதை மின்னஞ்சல் செய்து, இந்த செய்தியை எல்லோருக்கும் பரப்ப வேண்டும்.

said...

//philippine lottery said...
This is a nice blog. I like it!
thank you sir

t.vijay

said...

very different, informative and interesting blog. keep up the good work and do update regularly.

Best Wishes

M.D.S.PRABU

said...

// M.D.S.PRABU said...
very different, informative and interesting blog. keep up the good work and do update regularly.

Best Wishes

M.D.S.PRABU
thank you very much

t.vijay

said...

very good posting.congrats

said...

// ajay said...
very good posting.congrats//
thank you ajay

t.vijay

Anonymous said...

Vijay
your blog is nice. Keep it up.

said...

//lotto said...
Well, all I can say is. Im hungry//


ok sir as you please!

t.vijay

Anonymous said...

பெட்ரோல் உபயோகத்தை குறைத்தால் அதன் விலை நிச்சயம் குறையும்.

said...

//Anonymous said...
பெட்ரோல் உபயோகத்தை குறைத்தால் அதன் விலை நிச்சயம் குறையும்.


கருத்துக்கு நன்றி நண்பரே
தி.விஜய்

said...

ரொம்ப இண்ட்ரெஸ்டிங் கருத்து விஜய். ஆனால் பெட்ரோலையும், முட்டையையும் கம்பேர் பண்ண முடியாது. ஒருவர் சொன்னது மாதிரி முட்டை அழுகக்கூடிய பொருள்.

ஆனால் பப்ளிக் ட்ரான்ஸ்போர்டேஷன் உபயோகிப்பது, நடப்பது அல்லது சைக்கிள் உபயோக்கிப்பது போன்றவற்றால் தனிநபர் பெட்ரோல் செலவை நிச்சயம் குறைக்கலாம்.

said...

இடையிடையே படங்களுடன்.....அழகான எழுத்துநடையில் சிந்திக்க வைக்கும் பதிவு:))

said...

// Divya said...
இடையிடையே படங்களுடன்.....அழகான எழுத்துநடையில் சிந்திக்க வைக்கும் பதிவு:))//

வருகைகும் பாரட்டுக்கும் நன்றி..
விஜய்

said...

//Anonymous said...
Vijay
your blog is nice. Keep it up.

வருகைகும் பாரட்டுக்கும் நன்றி..
விஜய்

said...

//Sen22 said...
நல்லா இருக்குங்க உங்க ஐடியா...


நல்ல ஐடியா ஒர்க் ஆனா நல்லது தானே! சார்

தி.விஜய்

Anonymous said...

arumaiyaana kruththukkal.aniyaam seeyum petrol urpaththi seeyum naadukalai ippadi sethu thaan adakkavendum, vijay sir

kannanbala

said...

// Anonymous said...
arumaiyaana kruththukkal.aniyaam seeyum petrol urpaththi seeyum naadukalai ippadi sethu thaan adakkavendum, vijay sir

kannanbala//

thank you sir for your support.

t.vijay

said...

//ARUVAI BASKAR said...
ஆனால் முட்டை அழுகும் பொருள் !
இந்த தத்துவம் அழுகாத பெட்ரோலுக்கு பொருந்துமா ?]
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்//

நாம் எந்தp பொருளை வாங்குவதையும் பாதியாகக் குறைத்தால்,அந்த பொருளின் supply-demand ratio 50 %
ஆவதால் விலை கண்டிப்பாக குறையும்.

தி.விஜய்

said...

படங்களை நடுவில் வருவதுபோல அலைன்மெண்ட் செய்து,
வரிகள் படங்கள் இடையே சிக்காமல் செய்தால் படிப்பதற்கு
வசதியாக இருக்கும் விஜய்!

Anonymous said...

நல்ல கருத்து விஜய். ஆனால் ஒரு முட்டை சாப்பிட்டுக்கொண்டு வாழ்க்கையை ஓட்டி விடலாம், ஆனால் பாதி பெட்ரோல் போடும் வண்டி பாதி தூரம் தான் போகும். மிச்ச தூரத்தை நடந்து கடப்பதா? இந்த யோசனை அளவுக்கு இல்லையென்றாலும் எங்க ஆத்தா ஒரு யோசனை சொன்னார்.

அவரிடம் அப்பிடி ஆத்தா கொக்க பிடிக்கறதுன்னு கேட்டேன். அதுக்கு அவரு "கொக்கு நின்னுக்கிட்டு இருக்கறப்போ (பறக்கறப்போ இதை செய்ய முடியாது) அலுங்காப்புல பின்னால போயி அதிட தலையில வெண்ணெய வைக்கனும். அதுக்கப்புறம் தூரமா போயி ஒளிஞ்சுக்கனும். வெண்ணெய் உருகி வழிஞ்சு கொக்கோட நண்ணாஇ மறைக்கும். அதுக்கப்புறம் உடனே ஓடிப்போயி புடிச்சுக்கலாம் " நு சொன்னார்.

Anonymous said...

நல்ல கருத்து விஜய். ஆனால் ஒரு முட்டை சாப்பிட்டுக்கொண்டு வாழ்க்கையை ஓட்டி விடலாம், ஆனால் பாதி பெட்ரோல் போடும் வண்டி பாதி தூரம் தான் போகும். மிச்ச தூரத்தை நடந்து கடப்பதா? இந்த யோசனை அளவுக்கு இல்லையென்றாலும் எங்க ஆத்தா ஒரு யோசனை சொன்னார்.

அவரிடம் அப்பிடி ஆத்தா கொக்க பிடிக்கறதுன்னு கேட்டேன். அதுக்கு அவரு "கொக்கு நின்னுக்கிட்டு இருக்கறப்போ (பறக்கறப்போ இதை செய்ய முடியாது) அலுங்காப்புல பின்னால போயி அதிட தலையில வெண்ணெய வைக்கனும். அதுக்கப்புறம் தூரமா போயி ஒளிஞ்சுக்கனும். வெண்ணெய் உருகி வழிஞ்சு கொக்கோட கண்ணாஇ மறைக்கும். அதுக்கப்புறம் உடனே ஓடிப்போயி புடிச்சுக்கலாம் " ணு சொன்னார்.

said...

//SP.VR. SUBBIAH said...
படங்களை நடுவில் வருவதுபோல அலைன்மெண்ட் செய்து,
வரிகள் படங்கள் இடையே சிக்காமல் செய்தால் படிப்பதற்கு
வசதியாக இருக்கும் விஜய்!//

ஆசிரியர் ஐயா,
வணக்கம்.தங்களின் பல்சுவை மற்றும் classroom 2007 பதிவுகளைப் பார்த்துத்தான் வலைப்பூவில் வலம் வர ஆரம்பித்தேன்.

தாங்கள் அன்புடன்,
மனதை ஈர்க்கும் படியான வண்ணத்தையும்,வடிவத்தையும் மாற்றச் சொன்ன முதல் ஆலோசனக்கும், படங்களை சீரமைப்பு ஆலோசனக்கும் நன்றி.

அதன் படி அடுத்த பதிவிலிருந்து பதிகிறேன்.தங்களின் வருகைக்கும் மேலான ஆலோசனக்கும் நன்றி ஐயா.

தங்களின் அன்பும்,ஆதரவும்,ஆசிர்வாதமும் எப்போதும் வேண்டும் என பணிவன்புடன் வேண்டும்

என்றும் தங்கள்
தி.விஜய்
கோவை

said...

அருமையான யோசனைதான். ஆனால், நடைமுறைக்கு ஒத்துவருமா என்பது நம் கையில்தான் இருக்கு!

அருவை பாஸ்கர் சொன்னது மாதிரி, பெட்ரோலை எவ்வளவு நாள் வேண்டுமானாலும் சேமித்து வைக்கலாமே? ஆனாலும், தேவைகளைக் குறைத்தால் கண்டிப்பாக விலையும் குறையும்.

said...

இதை நுகர்வோரின் எதிர்ப்பு என கூறுவார்கள். தில்லியில் பால்விலை திடீரென அதிகரிக்க, ஒரு இயக்கம்போல மக்கள் பால் வாங்குவதை மிகவும் மட்டுப்படுத்தினர். பால் அபரிதமாக தேங்கி போயிற்று. முதலிக் கேக்குகள், தயிர், வெண்ணெய், நெய் என்றெல்லாம் அதை மாற்றினார்கள். பிறகு அவையும் தேங்க ஆரம்பிக்க, ஓசைப்படாமல் பால் விலை கட்டுப்பாட்டுக்கு வந்தது.

இது அறுபதுகளில் நடந்ததாக அக்காலக் கட்டங்களில் பேப்பர்களில் படித்துள்ளேன்.

சிவாஜியையோ தசாவதாரத்தையோ முதல் நாள் முதல் ஷோ போய்த்தான் பார்க்க வேண்டுமா? சில வாரங்கள் பொறுமையாக இருந்தால் டிக்கெட் விலை தானே குறையாதா.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

//தஞ்சாவூரான் said...
அருமையான யோசனைதான். ஆனால், நடைமுறைக்கு ஒத்துவருமா என்பது நம் கையில்தான் இருக்கு!

அருவை பாஸ்கர் சொன்னது மாதிரி, பெட்ரோலை எவ்வளவு நாள் வேண்டுமானாலும் சேமித்து வைக்கலாமே? ஆனாலும், தேவைகளைக் குறைத்தால் கண்டிப்பாக விலையும் குறையும்.//

எந்த பொருளையும் ஒரு அளவுக்குமேல் சேமித்து வைக்கமுடியாது.இடப் பற்றாக்குறை தான் பிரச்சனை..

தேவைகள் குறைக்கப்பட்டால்
அதன் விலை குறையும் என்பது கண்கூடு.


தி.விஜய்

said...

படங்களும் கருத்தும் அருமை விஜய்.
(மெய்யாலுமே நீங்கள் சுட்ட படங்கள் தானா? புரபெசனல் ரேஞ்சிக்கு இருக்குது :)))))) )

said...

//@ தி.விஜய்

சுப்பபையா சார் இன்னும் தேர்வு இல்லை என்று சொல்லவில்லை அதுக்குள்ளே குத்தாட்டமா! கவனம் கோவை நண்பா! //

மெலடி-யோ , குத்தாட்ட-மொ தேர்வு இல்லை நண்பா, அதுதான் இத்தனை குஸி,

//(கோவை பதிவர் சந்திப்பில் சந்திப்போம்) //
எப்போது எங்கே என்ற தகவல்கள் இல்லை நண்பரே, அதே போல வாத்தியார் வருவாரா மாட்டாரா?

said...

//dondu(#11168674346665545885) said...
இதை நுகர்வோரின் எதிர்ப்பு என கூறுவார்கள். தில்லியில் பால்விலை திடீரென அதிகரிக்க, ஒரு இயக்கம்போல மக்கள் பால் வாங்குவதை மிகவும் மட்டுப்படுத்தினர். பால் அபரிதமாக தேங்கி போயிற்று. முதலிக் கேக்குகள், தயிர், வெண்ணெய், நெய் என்றெல்லாம் அதை மாற்றினார்கள். பிறகு அவையும் தேங்க ஆரம்பிக்க, ஓசைப்படாமல் பால் விலை கட்டுப்பாட்டுக்கு வந்தது.

இது அறுபதுகளில் நடந்ததாக அக்காலக் கட்டங்களில் பேப்பர்களில் படித்துள்ளேன்.

சிவாஜியையோ தசாவதாரத்தையோ முதல் நாள் முதல் ஷோ போய்த்தான் பார்க்க வேண்டுமா? சில வாரங்கள் பொறுமையாக இருந்தால் டிக்கெட் விலை தானே குறையாதா.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

டோண்டு சாரின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிகள்.

supply-demand விகிதம் தான் ஒரு பொருளின் விலையை நிர்ணியப்பதை, தலைநகர் டில்லியில் நடந்த பால்விலையேற்றத்தை காரனம் காட்டியததற்கு நன்றி.

பாலில் சாதித்தை பெட்ரோலிலும் சாதித்து காட்டுவோம்.

அன்புடன்
தி.விஜய்

said...

கோவை சந்திப்பிற்கான இடம் முடிவு செய்யப்பட்டது | தியாகு

சில நாள்களுக்கு முன்பு கோவையில் இணைய குழும நண்பர்கள் சந்திப்பை சொன்னோம்

மறந்திருக்க மாட்டீர்கள் இப்போது இடம் தீர்மானிக்கப்பட்டுள்ளது


கோவை சந்திப்பிற்கான இடம் : தேதி:13.07.2008

42, சீனிவாசா நகர்,
கவுண்டம்பாளையம்
கோயம்புத்தூர்.


தொலைபேசி :


மஞ்சூர் ராசா : 9442461246

தமிழ் பயணி சிவா: 9894790836


சஞ்சய் : 9842877208


அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்

எழுதியவர் தியாகு at



2 முத்துக்கள்:
said...
இணைய குழும நண்பர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

திரட்டி.காம் தளத்தில் நிகழ்வு பகுதியில் இதை அறிவித்துள்ளேன் பார்க்கவும்.

வெங்கடேஷ்


said...
இணைய நண்பர்கள் சந்திப்பை திரட்டியில் வெளியிட்டமைக்கு நன்றிவெங்கடேஸ் நீங்களும் முடிந்தால்
கலந்துகொள்ளுங்களேன்
கோவையில் பதிவர்கள் சந்திப்பு

//SP.VR. SUBBIAH said...
////கோவை விமல்(vimal) said...
//@ தி.விஜய்
சுப்பபையா சார் இன்னும் தேர்வு இல்லை என்று சொல்லவில்லை அதுக்குள்ளே குத்தாட்டமா! கவனம் கோவை நண்பா! //
மெலடி-யோ , குத்தாட்ட-மொ தேர்வு இல்லை நண்பா, அதுதான் இத்தனை குஸி,.
//(கோவை பதிவர் சந்திப்பில் சந்திப்போம்) //
எப்போது எங்கே என்ற தகவல்கள் இல்லை நண்பரே, அதே போல வாத்தியார் வருவாரா மாட்டாரா?/////

கோவை இணைய நண்பர்கள் சந்திப்பிற்கான இடம்
ஜூலை 13ம் தேதி கோவையில் நடைபெறும் இணையநண்பர்கள் சந்திப்புக்கு வர வேண்டிய முகவரி:

திரு. மஞ்சூர் ராசா இல்லம்
42, சீனிவாசா நகர்,
கவுண்டம்பாளையம்.
கோயம்புத்தூர்.

நேரம் : காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை.

.... மேட்டுபாளையம் ரோட்டில் துடியலூர் நோக்கி செலும்போது கவுண்டம்பாளையம் சிக்னலில் ஒரு "U" வளைவு எடுத்துக் கொண்ட உடன் இடது புறம் பார்த்தால் திமுக இளைஞர் அணி என்ற அறிவிப்புடன் ஒரு பழைய கட்டிடம் இருக்கும். அதை ஒட்டி கொஞ்சம் கீழிறங்கியவாறு செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்றதும் வலது புறம் "மஞ்சூர் இல்லம்" என்ற பெயரில் இரண்டு மாடி வீடு இருக்கும். அதன் மேல் தளத்தில் சந்திப்பு நடைபெறும்....
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :

மஞ்சூர் ராசா : 9442461246

தமிழ் பயணி சிவா: 9894790836

சஞ்சய் : 9842877208
--------------------
message taken from the following blog:
http://podian.blogspot.com?///

//தமாம் பாலா (dammam bala) said...
வலைபதிவர் சந்திப்புக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள். நீங்க சொல்ற லொகெஷன் பாத்தா FCI கோடவுன், பயர் சர்வீஸ்,தண்ணி டேங்கு, கோயில் பக்கம் போல இருக்கு.. நமக்கும் கொஞ்சம் கவுண்டம்பாளயம் தெரியுமுங்கோ..//

said...

விஜய் உங்கள் பதிவு நல்லா இருக்கு.
பாரட்டுக்கள்.தாங்கள் சொலவதை எல்லோரும் கடைபிடித்தால் நிச்சயம் பெட்ரோல் விலை உலகில் குறையும்.



தீத்தாரப்பன்.
கோவை

said...

very illustrative work with apt photos and narration.well done!all the best!

said...

//கல்கிதாசன் said...
படங்களும் கருத்தும் அருமை விஜய்.
(மெய்யாலுமே நீங்கள் சுட்ட படங்கள் தானா? புரபெசனல் ரேஞ்சிக்கு இருக்குது :)))))) )


வாழ்த்துக்கும் பாரட்டுக்கும் நன்றி சார்

தி.விஜய்

Anonymous said...

படங்களும் கருதுக்களும் நல்லா இருக்கு விஜய் சார். தொடர்ந்து இயற்கையை காக்கும் பதிவுகள் போடவும்.

சத்யா

said...

//thetharappan said...
விஜய் உங்கள் பதிவு நல்லா இருக்கு.
பாரட்டுக்கள்.தாங்கள் சொலவதை எல்லோரும் கடைபிடித்தால் நிச்சயம் பெட்ரோல் விலை உலகில் குறையும்.



தீத்தாரப்பன்.
கோவை


வருகைகும் கருத்துக்கும் நன்றி.
தி.விஜய்

said...

வலை பதிவர் சந்திப்பில் என்னால் வர இயலாமைக்கு மிகவும் வருதுகிறேன். சில, பல காரணங்களினால் நண்பர்களையும், வாத்தியாரையும் சந்திக்க தவறிவிட்டது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

Anonymous said...

இது நல்ல பதிவு வாழ்த்துக்கள்

Anonymous said...

Good post Vijay...
I agree with you,in case of eggs .If there is very less demand for eggs and more production ,certainly the price of eggs will go down .
But in case of petrol even if we cut down the use by half, the price will not reduce much because petrol is a natural-resource we cannot produce them like eggs.some day we are going to run out of petrol,so the ONLY solution is start using public transport or a cycle as u said .In a country like India where the weather is always gud I mean no snow or ice one can certainly use these means of transport .
Even if we cut the usage the Governmet decides the price of petrol so it is the government who should make strict laws and we, the responsible public must totally follow that.
Personally I feel the petrol price rise itself is to reduce the usage .

Anonymous said...

// Anonymous said...
இது நல்ல பதிவு வாழ்த்துக்கள்


thank you sir

t.vijay

said...

அன்புள்ள விஜய்

மிகச்சிறந்த சமுதாய உணர்வின் வெளிப்பாடு.படங்கள் உண்மையை சட்டையைப்பிடித்து இழுத்து சொல்லும் உக்கிரம்.இதை ஒரு இளைய தலைமுறையின் "இடித்துரை" யெனச்சொல்லாம்.மன்னர்கள் செவியை
பணப்பஞ்சு அடைத்திருக்கையில் இம்முழக்கம் விடிவை விளைவிக்கும்
நாளை அருகில் கொண்டு வரும்

அன்புடன்
கனவ‌ரசு

said...

//Anonymous said...
Good post Vijay...
I agree with you,in case of eggs .If there is very less demand for eggs and more production ,certainly the price of eggs will go down .
But in case of petrol even if we cut down the use by half, the price will not reduce much because petrol is a natural-resource we cannot produce them like eggs.some day we are going to run out of petrol,so the ONLY solution is start using public transport or a cycle as u said .In a country like India where the weather is always gud I mean no snow or ice one can certainly use these means of transport .
Even if we cut the usage the Governmet decides the price of petrol so it is the government who should make strict laws and we, the responsible public must totally follow that.
Personally I feel the petrol price rise itself is to reduce the usage //

well said.
if we start reducing the usuage of petrol the price will come down.
egg example is to say about the supply-demand ratio only which indirectly affects the selling cost.thank you

said...

miga nalal karuthai solli irukeenga.

paynulla pathivu.

said...

//thirumalraju said...
அன்புள்ள விஜய்

மிகச்சிறந்த சமுதாய உணர்வின் வெளிப்பாடு.படங்கள் உண்மையை சட்டையைப்பிடித்து இழுத்து சொல்லும் உக்கிரம்.இதை ஒரு இளைய தலைமுறையின் "இடித்துரை" யெனச்சொல்லாம்.மன்னர்கள் செவியை
பணப்பஞ்சு அடைத்திருக்கையில் இம்முழக்கம் விடிவை விளைவிக்கும்
நாளை அருகில் கொண்டு வரும்

அன்புடன்
கனவ‌ரசு//

கருத்துக்கு நன்றி நண்பரே
தி.விஜய்

said...

//புதுகைத் தென்றல் said...
miga nalal karuthai solli irukeenga.

paynulla pathivu.//
வருகைகும் பாரட்டுக்கும் நன்றி..
விஜய்

said...

ரொம்ப நல்லா சொன்னீங்க விஜய். நான் முழுமையா இன்னும் உங்க பதிவுகள படிக்கல. கண்டிப்பா படிக்கணும். படங்க வெகு அழகு!

said...

இன்ட்ரஸ்டிங்கா எழுதியிருக்கீங்க. :)

சிக்கனம்; தேவைக்கேற்ற பெட்ரோல்; அல்லது திட்டமிட்ட தேவை என்ற வகையில்....ஆம்! நாம் நம் பட்ஜெட்டைக் குறைக்கலாம்.

இதன் விளைவு உலக அளவில் பெட்ரோல் விலையைக் குறைக்க நீண்ட நாட்கள் ஆகும்.

ஆனால் நம் அளவில், நம் பாக்கெட்டை பாதுகாக்க , கொஞ்சம் மெனக்கெடலாம் தான். :)

உண்மையான சமூக அக்கறையுடன், எழுதியுள்ளீர்கள்.வாழ்த்துகள் விஜய்.

said...

உங்கள் ஐடியா புன்னகையை வரவழைத்தாலும் தீர்வைத் தராது.
ஆனால் ஆயில் பயனபாட்டைக் குறைத்தால் சிறிது மூச்சு விட அவகாசம் கிடைக்கும் என்ற அளவில் சரி..

படங்கள் அருமை.நீங்கள் புகைப்படத்தொழிலில் இருப்பதை அவை சொல்லாமல் சொல்லின...

said...

//பழமைபேசி said...
ரொம்ப நல்லா சொன்னீங்க விஜய். நான் முழுமையா இன்னும் உங்க பதிவுகள படிக்கல. கண்டிப்பா படிக்கணும். படங்க வெகு அழகு!


வருகைக்கு நன்றி. பதிவுகளைப் படித்து நல் ஆலோசனைகள் சொல்லவும்.

தி.விஜய்

said...

// NewBee said...
இன்ட்ரஸ்டிங்கா எழுதியிருக்கீங்க. :)

சிக்கனம்; தேவைக்கேற்ற பெட்ரோல்; அல்லது திட்டமிட்ட தேவை என்ற வகையில்....ஆம்! நாம் நம் பட்ஜெட்டைக் குறைக்கலாம்.

இதன் விளைவு உலக அளவில் பெட்ரோல் விலையைக் குறைக்க நீண்ட நாட்கள் ஆகும்.

ஆனால் நம் அளவில், நம் பாக்கெட்டை பாதுகாக்க , கொஞ்சம் மெனக்கெடலாம் தான். :)

உண்மையான சமூக அக்கறையுடன், எழுதியுள்ளீர்கள்.வாழ்த்துகள் விஜய்.//

வருகைக்கும் பாரட்டுக்கும் நன்றி
தி.விஜய்

said...

/
முட்டை உற்பத்தியாளர்களிடம் சரக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.ஆனால் கோழிக்கு இந்த விவகாரம் தெரியாமல் அது பாட்டுக்கு " என் கடன் பணி செய்து கிடப்பதே " என முட்டையிட்டுக் கொண்டெ இருந்தது .உற்பத்தியாளர் இடப் பற்றாக் குறையால் தவியாய் தவித்தார்.
/


பாவம் கோழிகளுக்கு வேண்டுமானால் அது தெரியாமல் போய் இருக்கலாம் ஆனால் பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் கூட்டு களவானிகள் 'ஒபேக்'அமைப்பிற்கு நன்றாக தெரியும்.

கச்சா எண்ணைய பூமியில் இருந்து எடுப்பதை குறைத்தால் தானாக டிமாண்ட் ஏற்பட்டுவிடப்போகிறது. இவ்வாறு செய்தேதான் பேரல் 140 டாலர் என்பதை மாறாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.

1971க்கு பிறகு புதிய எண்ணை வயல்கள் கண்டுபிடிக்க படவில்லை.

சிக்கனம் அவசியம்தான். சிக்கனமாக இருப்பதால் உங்கள் பாக்கெட்டில் விழும் துண்டு சிறிது குறையும் ஆனால் பெட்ரோல் விலை குறையாது.

பெட்ரோல் விலை குறையவேண்டுமெனில் மாற்று எரிபொருள் கண்டுபிடிக்கப் படவேண்டும் அது மிக அவசியம் அதுவும் மிக விரைவாக.

அவ்வாறு மாற்று எரிபொருள் ஆராய்சி எதும் நடைபெற்றாலே அங்குள்ளவர்களை இந்த 'ஒபேக்' நிறுவனங்கள் சரியான படி கவனித்து மாற்று எரிபொருள் பற்றிய சிந்தனை வராமலேயே தடுத்து வருகின்றனர்.

நம்பிக்கையூட்டும் விதமாக வெற்றிகரமாக ஹைட்ரஜனில் ஓடும் கார் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

வெற்றிகரமாக அவை பெருமளவில் தயாரிக்கப்பட்டு அவை ரோடுக்கு வந்தால் பெட்ரோலை மட்டுமே ஒரே ஆதாரமாக கொண்டு கொள்ளை அடிக்கும் வளைகுடா நாடுகள் வேறு வழியில்லாமல் விலையை குறைக்கும்.

நீங்கள் பைக்குக்கு போடும் 10லிட்டரை 8 லிட்டராக குறைத்தால் ஒன்றும் மாறாது. இது திண்ணம்.

said...

முட்டை ஒரு நாள் என்ன ஒரு வாரம் என்ன ஒரு மாதம் வருடம் கூட சாப்பிடாமல் இருக்கலாம் , பாலும் அப்படித்தான்

ஆனால் இன்றளவில் பெட்ரோல் , டீசல் அப்படி இல்லை. எதோ ஒரு குக்கிராமத்தில் விளையும் காய்கரியும் விளைபொருட்களும் சென்னையில் இருக்கும் ஒருவனுக்கு கொண்டு வர, மின்சார தடையின் போது ஜெனரேட்டரை இயக்க, லாரி, இரயில், பேருந்து இயக்க என எவை ஒன்றுக்கும் பெட்ரோலுக்கு மாற்று இல்லை.

said...

இது forward வந்த மெயிலாச்சே? அண்ணாத்தே இதெல்லாம் நடக்குற வேலையில்லிங்கண்ணா.. கோழியால முட்டை போடுறதை கண்ட்ரோல் பண்ண முடியாது ஆனால் பெட்ரோல் எடுப்பதை நிறுத்த முடியும். தேவை குறைத்தால் அவர்கள் பெட்ரோல் எடுப்பதை குறைத்து விடுவார்கள். பெட்ரோல் விலை ஒரு சில மாப்பியாக்கல் கையிலும், ஷெல் போன்ற கம்பெனிகளின் கையிலும் இருக்கிறது, அவர்களின் கொட்டத்தை அடக்காவிட்டால் இதை எல்லாம் ஒண்ணும் செய்ய முடியாது. இதற்கு தீர்வு மாற்று எரி பொருளை உபயோகப்படுத்துவது தான்.

said...

அருமையான பதிவு. அதிலும் கோழிக்கு தெரியாத விவகாரம் அருமை. நல்ல பதிவு நன்பரே.

ஜெயக்குமார்

said...

//மங்களூர் சிவா said

முட்டை ஒரு நாள் என்ன ஒரு வாரம் என்ன ஒரு மாதம் வருடம் கூட சாப்பிடாமல் இருக்கலாம் , பாலும் அப்படித்தான்

ஆனால் இன்றளவில் பெட்ரோல் , டீசல் அப்படி இல்லை. எதோ ஒரு குக்கிராமத்தில் விளையும் காய்கரியும் விளைபொருட்களும் சென்னையில் இருக்கும் ஒருவனுக்கு கொண்டு வர, மின்சார தடையின் போது ஜெனரேட்டரை இயக்க, லாரி, இரயில், பேருந்து இயக்க என எவை ஒன்றுக்கும் பெட்ரோலுக்கு மாற்று இல்லை.
//

மற்று எரிபொருளின் அவசியம் உலகின் நாடுகளுக்கு புரிய ஆரம்புத்துவிட்டது.நல்லது நடக்கும் நம்புவோம்.
வருகைக்கும் கருத்துகும் நன்றி

தி.விஜய்.

said...

//சந்தோஷ் = Santhosh said...
இது forward வந்த மெயிலாச்சே? அண்ணாத்தே இதெல்லாம் நடக்குற வேலையில்லிங்கண்ணா.. கோழியால முட்டை போடுறதை கண்ட்ரோல் பண்ண முடியாது ஆனால் பெட்ரோல் எடுப்பதை நிறுத்த முடியும். தேவை குறைத்தால் அவர்கள் பெட்ரோல் எடுப்பதை குறைத்து விடுவார்கள். பெட்ரோல் விலை ஒரு சில மாப்பியாக்கல் கையிலும், ஷெல் போன்ற கம்பெனிகளின் கையிலும் இருக்கிறது, அவர்களின் கொட்டத்தை அடக்காவிட்டால் இதை எல்லாம் ஒண்ணும் செய்ய முடியாது. இதற்கு தீர்வு மாற்று எரி பொருளை உபயோகப்படுத்துவது தான்//

வருகைக்கும் கருதுக்கும் நன்றி.

தி.விஜய்

said...

//கானகம் said...
அருமையான பதிவு. அதிலும் கோழிக்கு தெரியாத விவகாரம் அருமை. நல்ல பதிவு நன்பரே.

ஜெயக்குமார்//

நன்றி ஜெயக்குமார் அவ்ர்களே.

தி.விஜய்

Anonymous said...

I like this post. but this will not definetely bting down oil proces. but one can minimise his own expenses.

the only way is find out the alternative to petrol.

Good post. keep it up.
M.Vijayan

Anonymous said...

what difference will it make if 2 ppl put for Rs 200 each or 10 ppl put for Rs40 each. it is all the same

Change will come only if we reduce the use of petrol,
try to walk to the nearby shops, try to pool in ppl or try to use bus wherever possible.
only reduced demand will bring the change

said...

//Anonymous said...
I like this post. but this will not definetely bting down oil proces. but one can minimise his own expenses.

the only way is find out the alternative to petrol.

Good post. keep it up.
M.Vijayan


thank you mr.Vijayan.


t.vijay

said...

//Anonymous said...
what difference will it make if 2 ppl put for Rs 200 each or 10 ppl put for Rs40 each. it is all the same

Change will come only if we reduce the use of petrol,
try to walk to the nearby shops, try to pool in ppl or try to use bus wherever possible.
only reduced demand will bring the change


thank you sir

t.vijay

Anonymous said...

Petrol is, really, cheap.
I filled up my car's fuel tank, and I thought fuel has become really expensive after the recent price hike.
But then I compared it with other common liquids and did some quick calculations, and I felt a little better.
To know why, see the results below – you'll be surprised at how outrageous some other prices are !

Diesel (regular) in Mumbai : Rs.36.08 per litre

Petrol (speed) in Mumbai : Rs.52 per litre

Coca Cola 330 ml can : Rs.20 = Rs.61 per litre

Dettol antiseptic 100 ml Rs.20 = Rs.200 per litre

Radiator coolant 500 ml Rs.160 = Rs.320 per litre

Pantene conditioner 400 ml Rs.165 = Rs.413 per litre

Medicinal Mouthwash like Listerine 100 ml Rs.45 = Rs. 450 per litre

Red Bull 150 ml can : Rs.75 = Rs.500 per litre

Corex cough syrup 100 ml Rs.57 = Rs. 570 per litre

Evian water 500 ml Rs. 330 = Rs. 660 per litre

Rs. 660 for a litre of WATER !!

And the buyers don't even know the source (Evian spelled backwards is Naive.)

Kores whiteout 15 ml Rs. 15 = Rs. 1000 per litre

Cup of coffee at any decent business hotel 100 ml Rs. 50 > Rs. 500 per litre

Old Spice after shave lotion 100 ml Rs. 175 = Rs. 1750 per litre

Pure almond oil 25 ml Rs. 68 = Rs. 2720 per litre

And this is the REAL KICKER...

HP DeskJet colour ink cartridge 21 ml Rs.1900 = Rs. 90476 per litre!!!

Now you know why computer printers are so cheap ? So they have you hooked for the ink !



So, the next time you're at the pump, don't curse anyone – just be glad your car doesn't run on cough syrup, after shave, coffee, or God forbid, printer ink!
p.paulraj

said...

பதிவினுக்கு வருகை தந்து கருத்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்

தி.விஜய்

said...

முட்டை பயன்பாடு குறைப்பதும் ஏன் நிறுத்துவதும் தனி மனிதர்கள் எடுக்கும் முடிவை பொறுத்து. முட்டை சாப்பிடாமல் ஆரோக்கியமாக நிறைய பேர் வாழ்கிறார்கள். என்னைப் போல. நண்பர் ஜீவா எனக்கு கொடுத்த இணைய தள முகவரியை கவனிக்கவும்.
http://www.vegsource.com/how_to_win.htm

பெட்ரோல் விலையை பொறுத்த வரை பொது போக்குவரத்தை முடிந்த வரை பயன்படுத்தினால் பெட்ரோல் செலவாவதை கணிசமாக குறைக்கலாம். அவசர உலகில் அது நிறைய பேருக்கு ஒத்து வருவதில்லை. அது தான் சிக்கல்.

said...

முட்டைக்கும் பெட்ரோலுக்கும் .....கொஞ்சம் கஷ்டம்தான் ...ஆனாலும் அருமையான ஐடியா!!!
அன்புடன் அருணா

said...

shri ramesh sadasivam said...
முட்டை பயன்பாடு குறைப்பதும் ஏன் நிறுத்துவதும் தனி மனிதர்கள் எடுக்கும் முடிவை பொறுத்து. முட்டை சாப்பிடாமல் ஆரோக்கியமாக நிறைய பேர் வாழ்கிறார்கள். என்னைப் போல. நண்பர் ஜீவா எனக்கு கொடுத்த இணைய தள முகவரியை கவனிக்கவும்.
http://www.vegsource.com/how_to_win.htm

பெட்ரோல் விலையை பொறுத்த வரை பொது போக்குவரத்தை முடிந்த வரை பயன்படுத்தினால் பெட்ரோல் செலவாவதை கணிசமாக குறைக்கலாம். அவசர உலகில் அது நிறைய பேருக்கு ஒத்து வருவதில்லை. அது தான் சிக்கல்


வருகைக்கும் தகவலுக்கும் நன்றி

தி.விஜய்.

said...

//teachtech said...
முட்டைக்கும் பெட்ரோலுக்கும் .....கொஞ்சம் கஷ்டம்தான் ...ஆனாலும் அருமையான ஐடியா!!!
அன்புடன் அருணா//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
தி.விஜய்

said...

பதிவினுக்கு வருகை தந்து கருத்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்

கோவை விஜய்

Anonymous said...

Crude oil is one of the most basic global commodities . Fluctuation in the crude oil prices has both direct and indirect impact on the global economy . Therefore, the prices of crude oil are tracked very closely by investors the worldover. Crude oil prices have gone up to record levels of USD 125 per bbl (rise of around 70 percent from previous year's levels).

The price variation in crude oil impacts the sentiments and hence the volatility in stock markets all over the world. The rise in crude oil prices is not good for the global economy. Price rise in crude oil virtually impacts industries and businesses across the board. Higher crude oil prices mean higher energy prices, which can cause a ripple effect on virtually all business aspects that are dependent on energy (directly or indirectly).

There are many factors that influence the global crude oil prices including technology to increase production , storage of crude oil by richer nations (one major indicator that is tracked closely is the US crude oil inventory data), changes in tax policy, political issues etc. In the recent past, we have seen many factors influencing the prices of global crude oil.

These are some of the important factors that influence crude oil prices globally:

Production

A large part of the world's crude oil share is produced by OPEC (Organisation of Petroleum Exporting Countries) nations. Any decisions made by OPEC countries to raise the prices or reduce production, immediately impacts the prices of crude oil in the global commodity markets.

Natural causes

In the recent past, we have seen many events driving volatility in the crude oil prices. Events like a hurricane hitting the oil producing areas in the US have driven the crude oil prices in global markets.

Inventory

Oil producers and consumers build a storage capacity to store crude oil for immediate future needs. They also build some inventories to speculate on the price expectations and sale/arbitrage opportunities in case of any unexpected changes in supply and demand equations. Any change in these inventory levels triggers volatility in crude oil's prices which in turn creates ripples in the stock markets.

Demand

The demand of crude oil is rising sharply due to high growth and demand from the emerging economies. On the supply side, the major sources of supplies are still the same as they were in the last decade. This is another factor that is influencing the prices of crude oil upwards.

( compiled-kannanbalan-)

said...

சரியா சொன்னீங்க யோசிக்க வேண்டிய விசயம்
முட்டை> பெட்ரோல் ஒப்பீடு மிக அருமை
http://priyamudan-prabu.blogspot.com/

said...

//பிரபு said...
சரியா சொன்னீங்க யோசிக்க வேண்டிய விசயம்
முட்டை> பெட்ரோல் ஒப்பீடு மிக அருமை
http://priyamudan-prabu.blogspot.com//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

said...

Well well well......

said...

//(^oo^) bad girl (^oo^) said...
Well well well......



thank you verymuch
kovai vijay