Wednesday, July 9, 2008

"என்னை வளர்த்த மனிதா, உன்னை அழி(ளி)ப்பேன் எளிதாய்"


வாய் பிளந்து மனித இனத்தை முழுங்க வரும் பிளாஸ்டிக் அரக்கனின் கோரத் தாண்டவம்.

பிளாஸ்டிக் பொருட்களை தாயரிப்பது எளிது.விலையோ மலிவு,கையில் எடுத்து செல்வது மிகவும் எளிது.வேலை முடிந்ததும் வெளியில் தூக்கிப் போடுவது அதை விட எளிது.

மனித குலத்தை அழிக்க புயலாய்,சுனாமியாய்,சூறாவழிக்காற்றாய் விஸ்வரூபம் எடுத்து எங்கும் வியாபித்திருக்கும் பாலிதீன் பைகள்


நம்மால் தூக்கிப் போடப்படும் பாலிதீன் பைகளின் சாம் ராஜ்யம் நீர்,நிலம், ஆகாயம் எங்கும் கொடிகட்டி பறப்பது யாவரும் அறிந்த ஒன்றே.

அழியா வரம் பெற்ற இந்த பாலிதின் பைகள் நீர் நிலைகளை,சுவாசிக்கும் காற்று மண்டலத்தை,பரந்த வான வெளியை மாசு படுத்தி பாழாக்கி கொண்டு இருப்பதை பற்றி பேசுகிறோம் ஆனால் அதை நிவர்த்தி செய்ய யாரும் முன்வரவில்லை.


உலக வெப்பமயமாதல் மற்றும் ஓசோன் படலத்தில் விழ்ந்த ஓட்டை எவ்வளவு பயங்கரமானாதோ
அதற்க்குச் சற்றும் வீரியம் குறந்தவரல்ல இந்த பகா சூர "பிளாஸ்டிக்"அரக்கன் "

காற்று, வெப்பம், சூரிய ஒளி ஆகியவற்றால் அழித்து மண்ணொடு மண்ணாக மக்கச் செய்யா முடியாச் சூழ்நிலையால் பரந்த பூமியின் நீர் நிலைகள் எல்லாம் வனப்பை இழ்க்கத் தொடங்கி விட்டன.எங்கெங்கு காணிலும் பாலிதீன் பையடா".அங்கே தாகத்துக்கு நீரருந்த வரும் கால் நடைகள் பலிகடகா ஆக்கப்படுகின்றன.கடல் வாழ் உயிரினங்களோ மூச்சு முட்டி மிதக்கின்றன.


ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இன்று மனித இனத்தின் ஆரோக்கியத்திற்கே பெரும் சவலாய்
கொக்கறிக்கிரது.

கண் கெடுவதற்கு முன் எப்படி சூரிய நமஸ்காரம் செய்வது.


1.முதலில் மிக மெல்லிய பாலிதீன்(ஒரு முறை உபயோகப் படுத்தும்)பைகளின் தயாரிப்பை நிறுத்த வேண்டும்.

2.துணிப்பை பைகளின் உபயோகத்தை அதிகரிக்க வேண்டும்

3.carry a bag, not carry bag இந்த தாரக மந்திரம் பூமியெங்கும் ஒலிக்க வேண்டும்.
4.பாலிதீன் பைகளின் தயாரிப்பில் உள்ள கம்பெனிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து அவரது வாழ்வுக்கு வழி வகை செய்வது அரசின் கடமை.

5.நம்மை முழுவது முழ்ங்கி ஏப்பம் விடுவதற்கு முன்னால் நாம் முந்தி "ப்ளாஸ்டிகின் உபயோகத்தை அறவே ஒழிப்போம்" என பிரச்சார இயக்கம் தொடங்குவோம்.


சுவாசிக்கும் காற்றும் கெட்டுப் போச்சு அண்ணே
சுற்றுச் சூழல் மாசு பட்டுப் போச்சு அண்ணே

குடிக்கும் தண்ணிரும் கெட்டுப் போச்சு அண்ணே
குடிகெடுக்கும் பாலிதீன் பையாலே இது அண்ணெ

கால்நடை யெல்லாம் கலங்கி பதறுது அண்ணே
காலன் முடிக்கும் முன்னே விழிப்போம் அண்ணே

48 comments:

Anonymous said...

I agree with you about these. Well someday Ill create a blog to compete you! lolz.

Anonymous said...

Gomen kudasai.

said...

நல்ல பதிவு.. ஆனா அழி(ளி)ப்பேன் புரியல.

said...

நல்ல பதிவு!

said...

பாலிதீன் பைகளின் ஆதிக்கத்தால் மண்வளம் கெட்டு,பெய்யும் மழை நீர் நிலத்திற்குள் இறங்காமல் வீணாய் கடலில் கலந்து,அதன் காரனமாய் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே போகிறது.

பருவ மழைகளும் பொய்ப்பதற்கு பாலிதீனும் ஒரு காரணமாம்.

சுற்றுச் சூழல் மாசுபட்டு இங்கே மனிதன் இப்போது கையில் தண்ணிர் பாட்டிலோடு போகிறவன்,வரும் நாளில் முதுகில் ஆக்ஸிசன் சிலிண்டரோடு போவானோ !என்ற பயம் உலகை உலுக்க ஆரம்பித்து விட்டது.

நண்பர் விஜயின் இந்தப் பதிவு பிளாஸ்டிக் உபயோகத்தை குறைத்து
மனித குலத்தை காப்பற்ற உதவிட வேண்டுமென்று விரும்புகிறேன்

Anonymous said...

இயற்கை வளத்தை காக்கும் உங்கள் வேள்வியில் நானும் இணைகிறேன்,விஜய் சார்

S.ராமச்சந்திரன்

said...

அருமையாக இருக்குங்க...படங்களும்

Anonymous said...

படங்கள் பிரமாதம் !

said...

// lotto numbers said...
I agree with you about these. Well someday Ill create a blog to compete you! lolz.//
well said. you are most welcome.
thank you very much for your good support .

t.vijay

said...

நல்ல பதிவு.. ஆனா அழி(ளி)ப்பேன் புரியல.//
அதே அதே விஜய்.
படங்களும் கருத்தும் பிரமாதம்.

said...

இது ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பதிவு

Anonymous said...

நம்மை அழிக்க வரும் பிளாஸ்டிக் அரக்கனை இல்லாது செய்வோம் உடனே

said...

உலகில் மனிதன் ஒரு நாளைக்கு உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் அளவு

USA-80 kg
Euro-60 kg
india- 2 kg

மொத்த அளவைப் பார்த்தால் பிளாச்டிக் நம்மை மூடிவிடும் போலிருக்கே!

said...

// கயல்விழி முத்துலெட்சுமி said...
நல்ல பதிவு.. ஆனா அழி(ளி)ப்பேன் புரியல.

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
உங்கள் கேள்விக்கான பதிலை உங்கள் வலைப்பதிவில் கொடுத்துள்ளேன்
தி.விஜய்

said...

//நாமக்கல் சிபி said...
நல்ல பதிவு!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிபி அண்ணா

தி.விஜய்

said...

விழிப்புணர்வை ஏற்படுத்தும் அற்புத பதிவு விஜய்.

////வல்லிசிம்ஹன் said...
நல்ல பதிவு.. ஆனா அழி(ளி)ப்பேன் புரியல.//
அதே அதே விஜய்.////

கயல்விழி முத்துலெட்சுமியின் எந்தப் பதிவின் பின்னூட்டத்தில் என்று கூறவில்லையே விஜய்..தேடிப் பார்த்து விட்டு வந்தேன். இங்கேயே மறுபடி பதில் சொல்லுங்களேன். இனி வருபவர்களுக்கும் புரியும் அல்லவா?

said...

//பொதிகைத் தென்றல் said...
பாலிதீன் பைகளின் ஆதிக்கத்தால் மண்வளம் கெட்டு,பெய்யும் மழை நீர் நிலத்திற்குள் இறங்காமல் வீணாய் கடலில் கலந்து,அதன் காரனமாய் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே போகிறது.

பருவ மழைகளும் பொய்ப்பதற்கு பாலிதீனும் ஒரு காரணமாம்.

சுற்றுச் சூழல் மாசுபட்டு இங்கே மனிதன் இப்போது கையில் தண்ணிர் பாட்டிலோடு போகிறவன்,வரும் நாளில் முதுகில் ஆக்ஸிசன் சிலிண்டரோடு போவானோ !என்ற பயம் உலகை உலுக்க ஆரம்பித்து விட்டது.

நண்பர் விஜயின் இந்தப் பதிவு பிளாஸ்டிக் உபயோகத்தை குறைத்து
மனித குலத்தை காப்பற்ற உதவிட வேண்டுமென்று விரும்புகிறேன்//

பொதிகை சார்,
உங்கள் பயம் உண்மைதான். இப்பொழுதே ஆக்ஸிசன் ஏற்று நிலயங்கள்( to have good air breath for mankind) சென்னையில் வந்து விட்டாதாக தகவல்

said...

//ராமலக்ஷ்மி said...
விழிப்புணர்வை ஏற்படுத்தும் அற்புத பதிவு விஜய்.

////வல்லிசிம்ஹன் said...
நல்ல பதிவு.. ஆனா அழி(ளி)ப்பேன் புரியல.//
அதே அதே விஜய்.////

கயல்விழி முத்துலெட்சுமியின் எந்தப் பதிவின் பின்னூட்டத்தில் என்று கூறவில்லையே விஜய்..தேடிப் பார்த்து விட்டு வந்தேன். இங்கேயே மறுபடி பதில் சொல்லுங்களேன். இனி வருபவர்களுக்கும் புரியும் அல்லவா?//




பிளாஸ்டிக் அரக்கனின் கூற்று:-

1.மனித குலத்தை அழிப்பேன்= to destroy mankind

2.மனிதனை அளிப்பேன் = to donate man to நீரில்லாச் சூழ்நிலைக்கு, மாசு பட்ட உலகுக்கு

அன்புடன்
தி.விஜய்

said...

//Anonymous said...
இயற்கை வளத்தை காக்கும் உங்கள் வேள்வியில் நானும் இணைகிறேன்,விஜய் சார்

S.ராமச்சந்திரன்//
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி சார்

தி.விஜய்

said...

//ajay said...
உலகில் மனிதன் ஒரு நாளைக்கு உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் அளவு

USA-80 kg
Euro-60 kg
india- 2 kg

மொத்த அளவைப் பார்த்தால் பிளாச்டிக் நம்மை மூடிவிடும் போலிருக்கே!//

உண்மைதான் அஜய் சார்
அது நம்மை முடிக்கும் முன்னே நாம் முந்திவிடுவோம் அது தான் என் கருத்து

said...

//k said...
இது ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பதிவு

தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி சார்

தி.விஜய்

Anonymous said...

கோவையில் பிளஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை மாநகராட்சி தடை செய்துள்ளது. அது நல்ல பலனைக் கொடுக்க ஆரம்பித்துள்ளது.

கோவை சங்கரன்

said...

//Anonymous said...
கோவையில் பிளஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை மாநகராட்சி தடை செய்துள்ளது. அது நல்ல பலனைக் கொடுக்க ஆரம்பித்துள்ளது.

கோவை சங்கரன்//

இது ஒரு நல்ல ஆரம்பம்,தொடர மக்களின் ஒத்துழப்பும் தேவை.கருத்துக்கு நன்றி.நண்பர்களுக்கும் சொல்லவும்

தி.விஜய்

said...

கோவை இணைய நண்பர்கள் சந்திப்பிற்கான இடம்
ஜூலை 13ம் தேதி கோவையில் நடைபெறும் இணையநண்பர்கள் சந்திப்புக்கு வர வேண்டிய முகவரி:

திரு. மஞ்சூர் ராசா இல்லம்
42, சீனிவாசா நகர்,
கவுண்டம்பாளையம்.
கோயம்புத்தூர்.

நேரம் : காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை.


மஞ்சூர் ராஜா
தமிழ்பயணி சிவா
லதானந்த் மற்றும் அவர் நண்பர்கள்
ஓசை செல்லா
திருப்பூர் தியாகு
புரவி ராம்
ஞானவெட்டியான்
காசி
சுரேஷ்
காயத்ரி
கனகராஜ்
ஜெயபிரகாஷ்
நாமக்கல் சிபி
கார்த்திக்
புதுகை பாண்டி
வடகரை வேலன்
பரிசில்காரன்
கூடுதுறை
வெயிலான்
கிரி
மேலும் வருபவர்களையும்
வருக வருக என வரேவேற்கிறோம்!//

தகவல்:http://podian.blogspot.com/

said...

vijay very useful article.congrats

thetharappan.s.s

Anonymous said...

Avoid plastics . Act before it kills you.

S.Ramasamy

said...

//hetharappan said...
vijay very useful article.congrats

thetharappan.s.s

July 13, 2008 9:11 AM
thank you sir
t.vijay

said...

// Anonymous said...
Avoid plastics . Act before it kills you.

S.Ramasamy

Thank you sri Ramasamy.

t.vijay

said...

I Thank you on behalf of RAAC Vijay.Your blog was excellent.
RAAC carried out a month long programme to create awarness on plastic carry bags. Response from coimbatore public was tremendous.
Raveendran.
Jt Secretary,RAAC

said...

//Ravi said...
I Thank you on behalf of RAAC Vijay.Your blog was excellent.
RAAC carried out a month long programme to create awarness on plastic carry bags. Response from coimbatore public was tremendous.
Raveendran.
Jt Secretary,RAAC//

கோவையின் அழகான அமைதியான இயற்கான, சுத்தமான ,சுகாதாரமான, சூழ்லையை நிர்மூலமாக்கும் கொடுங் குணத்துடன்

உயிர்த்திராவகமாம் நீரின் ஆதரங்கள்,

பரந்த நிலப் பரப்புக்கள்,

ஆகாய வான்வெளிகள்,

சுவாச வாயு மண்டலங்கள்,

ஆகியவற்றில் எல்லம் சுதந்திராய் விஷ கானம் பாடி சுற்றித் திரிந்த "பாலிதீன் குப்பைகளை" பெரு முயற்சி எடுத்து சமுக நல் பார்வையுடன் முழுவதுமாக அகற்றி மக்கள் நலப் பணியை மிகச் செம்மையாய் தங்களுடைய "ராக்" அமைப்பு செய்திட்ட செய்தி மனதுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

தொடரட்டும் உங்கள் பணி

பணி சிறக்க வழ்த்துக்கள்.

தி.விஜய்

said...

கஷ்டப்பட்டு வெள்ளியங்கிரி மலை ஏறினேன்.ஆறாவது மலையில் ஒரு டீக்கடை.அவர்களது சேவை பாராட்டதக்கது என்றாலும் அங்கும் பிளாஸ்டிக்டம்ளர்களை உபயோகித்து குப்பை மலைபோல இருந்தது கண்டு மனம்நொந்தேன்.

said...

//வேளராசி said...
கஷ்டப்பட்டு வெள்ளியங்கிரி மலை ஏறினேன்.ஆறாவது மலையில் ஒரு டீக்கடை.அவர்களது சேவை பாராட்டதக்கது என்றாலும் அங்கும் பிளாஸ்டிக்டம்ளர்களை உபயோகித்து குப்பை மலைபோல இருந்தது கண்டு மனம்நொந்தேன்.

வேளராசியின் வருத்தம்தான் எனக்கும்.ஆனால் ஒரு நிம்மதி கோவை ஈசா யோக மையம் சார்ந்தவர்கள் தன்னார்வ ஆர்வலர்கள்டன் சென்று 7 மலைகளிலும் மலைஏறிய மக்களால் வீசப்ப்பட்ட பீளாஸ்டிக்,மற்றும் பிற குப்பைகளையும் சேகரிப்பது மலையின் இயற்கைச் சூழலுகுகு திருப்புவது கொஞ்சம் ஆறுதல்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

தி.விஜய்

pugaippezhai.blogspot.com

Anonymous said...

ஹோட்டல்களில் சூடான சம்பார்,ரசம்,கூட்டு பொரியலுக்கு பயன்படும் பாலீதீன் பைகளின் எதிர்கால ரசாயன விளவுகளை நினத்தாவது நாம் திருந்த வேண்டும்

ராஜாராம்

said...

//Anonymous said...
ஹோட்டல்களில் சூடான சம்பார்,ரசம்,கூட்டு பொரியலுக்கு பயன்படும் பாலீதீன் பைகளின் எதிர்கால ரசாயன விளவுகளை நினத்தாவது நாம் திருந்த வேண்டும்

ராஜாராம்//

உண்மைதானே ராஜராம் சார்

Anonymous said...

பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை அரசு தடை செய்தாலும் வியாபாரிகள் நீதிமன்ற தடை பெற்று இதில் ஒரு தேக்க நிலையை உருவாக்குவதை தடுப்பது எப்படி.

said...

பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை அரசு தடை செய்தாலும் வியாபாரிகள் நீதிமன்ற தடை பெற்று இதில் ஒரு தேக்க நிலையை உருவாக்குவதை தடுப்பது எப்படி.//

மக்கள் இயக்ககம் தொடங்கி பிளாஸ்டிக் உபயோகத்தை நிறுத்தினால் மட்டும்
இதற்கு ஒரு விடிவு காலம்.அனைவரும் ஒன்றுபட்டு அரக்கனை ஒழிப்போம்.

Anonymous said...

கோவையிலிருந்து சிண்ணை செல்லும் பகல் இண்டர் சிட்டி விரைவு வண்டிகளில் பயனம் செய்வோர் உபயோகித்து தூர ஏறியும் பிளாஸ்டிக் பாட்டில் கள் 500ஐ தாண்டும்.இதை தடை செய்தால் நல்லது.

K.பாலு

Anonymous said...

Avoid plastics otherwise it will destroy you.Well said.


mahadevan.

said...

// Anonymous said...
Avoid plastics otherwise it will destroy you.Well said.


mahadevan.

THANK YOU SIR
T.VIJAY

said...

தேவையான பதிவு.

ப்ளாஸ்டிக் உபயோகிப்போர் பிறகு அதை கவனமாக ரீசைக்கிள் பண்ணும் எண்ணம் இருந்தால் பரவாயில்லை. மற்றபடி மங்காத குப்பைகளான ப்ளாஸ்டிக், மெட்டல் போன்றவற்றால் கடும் பாதிப்புகள் ஏற்படும்.

said...

//கயல்விழி said...
தேவையான பதிவு.

ப்ளாஸ்டிக் உபயோகிப்போர் பிறகு அதை கவனமாக ரீசைக்கிள் பண்ணும் எண்ணம் இருந்தால் பரவாயில்லை. மற்றபடி மங்காத குப்பைகளான ப்ளாஸ்டிக், மெட்டல் போன்றவற்றால் கடும் பாதிப்புகள் ஏற்படும்.//



வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
தி.விஜய்

said...

விஜய் பிளாஸ்டிக் பொருட்களின் மக்காத் தன்மையால் காற்று,நீர் மாசுவடுவது பற்றிய பதிவுக்கு நன்றி.

said...

விஜய் பிளாஸ்டிக் பொருட்களின் மக்காத் தன்மையால் காற்று,நீர் மாசுவடுவது பற்றிய பதிவுக்கு நன்றி.

said...

//அனைவரும் ஒன்றுபட்டு அரக்கனை ஒழிப்போம்//

ஆசை நன்றாகத்தான் இருக்கிறது.....நினைத்தால் முடியாதது எதுவுமில்லை......ம்ம்ம்ம்.
அருமையான...மிகத் தேவையான பதிவு..
அன்புடன் அருணா

said...

//Prabhakar said...
விஜய் பிளாஸ்டிக் பொருட்களின் மக்காத் தன்மையால் காற்று,நீர் மாசுவடுவது பற்றிய பதிவுக்கு நன்றி.


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
தி.விஜய்

said...

//Anonymous said...
கோவையிலிருந்து சிண்ணை செல்லும் பகல் இண்டர் சிட்டி விரைவு வண்டிகளில் பயனம் செய்வோர் உபயோகித்து தூர ஏறியும் பிளாஸ்டிக் பாட்டில் கள் 500ஐ தாண்டும்.இதை தடை செய்தால் நல்லது.

K.பாலு


இதை தடுப்பது யார்?

தி.விஜய்

said...

பதிவினுக்கு வருகை தந்து கருத்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்

கோவை விஜய்

said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வண்ங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/