Showing posts with label கச்சா எண்ணெய். Show all posts
Showing posts with label கச்சா எண்ணெய். Show all posts

Saturday, July 5, 2008

கடுப்படிக்கும் கச்சா எண்ணெய்! மர்ம-முடிச்சு அவிழ்கிறது...

கச்சா எண்ணெயின் அதீத விலையேற்றம் ஏன்?

1.எண்ணெய் உபயோகம் பரவலாக உலகயளவில் அதிகரித்துள்ளது..
2.எண்ணெய் உற்பத்தி நாடுகள் செய்யும் மாய்மாலங்கள்..
3.உற்பத்தி நாடுகளின் அரசியல் குழப்பங்கள்..
4.கழுத்தறுக்கும் யூகவாணிகம்..
5.முதலிட்டார்களின் முதலிடுகளின் திடீர் திருப்பங்கள்..

என் கதை (கச்சா எண்ணெய்):

நான் ஹைட்ரோ கார்பன் கலந்த திரவம்..பொதுவாக மதியக்கிழக்கு நாடுகளில் என்னோடு அதிக சல்ப்பர் நண்பனாய் தொடர்வான்..சல்ப்பர் குறைவான அளவுக்கு (.24%) 'Sweet Crude Oil'.

அடுத்து ஒரு சமன்பாடு:
ஒரு பேரல் = 42 USA கேலன்கள் = 158.98 லிட்டர்..

ஒரு டன் கச்சா எண்ணெய் = 7.33 பேரல் = 1165.32 லிட்டர்..
ஒரு நாளைக்கு உலகின் தேவை = 76 மில்லியன் பேரல்..

அமெரிக்காவின் உபயோகம் = 20 மில்லியன் பேரல்..

சீனாவின் உபயோகம் = 5.6 மில்லியன் பேரல்..
ஜப்பானின் உபயோகம் = 5.4 மில்லியன் பேரல்..

இந்தியாவின் உபயோகம் = 2.2 மில்லியன் பேரல்..

இந்தியாவின் உற்பத்தி 0.8 மில்லியன் பேரல்..மீதி இறக்குமதி செய்வதாலால் தான் இங்கே கண்ணமூச்சி விளையாட்டு..

--எனவே பெட்ரோல் , டீசல் உபயோகத்தை குறைப்போம்..
நமது அருமை தேசத்தை காக்க சூழுரைப்போம்...--