Thursday, June 19, 2008

'சுற்றுச் சூழல் போராளி' பட்டத்தை பெற்ற கோவை தமிழன் அன்பர் ம.யோகநாதன் அவர்களது வாரந்திர பணிகள்:


--பள்ளி மாணவரிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த இதுவரை 1687 பள்ளிகளில் விஞ்ஞான விளக்கப் படக் காட்சி நடத்தியுள்ளார்கள்.


--500 மேற்பட்ட பள்ளிகளில் பிரச்சாரம் செய்து "பிளாஸ்டிக் அரக்கனை" அறவே இல்லமால் செய்துள்ளார்கள்.


--மரக் கன்றுகளை நடுவதொடு விட்டுவிடாமல் ஒரு ஆண்டுவரை சொந்த பிள்ளைபோல் காக்கும் பெருமாளாய் வலம் வருகிறார்கள்.

--சுதேசியாக வாழும் இவ் அன்பர் வெளிநாட்டு மரக் கன்றுகளை தொடுவதில்லை என்பதில் வைராக்கியம் உள்ளவர்.


--வாரவிடுமுறையான ஒவ்வொரு திங்கட்கிழமையும் பெருநகரகளின் பள்ளி மற்றும் கல்லூரிகளில் புகைப்படக்காட்சி(Slide Show) நடத்தி விழிப்புணர்வு புரட்சி செய்பவர்.

--பொதுநலத் தொண்டு நிறுவனங்களின் இவரது நெருக்கம் இவரது பசுமை காக்கும் போராட்டத்திற்கு வலு சேர்ப்பது ஒரு சிறப்பு.


--தனது வருமானத்தில் பெரும் பகுதியை இந்த பசுமை வேள்விக்கே செலவிடும் உத்தமர்.

--மரம் வெட்டும் கொடுமையை எதிர்த்து பல முறை காரக்கிரகம் சென்றுள்ளார்.


--தனது பணிக்காலத்தில் பயணச்சீட்டை வேக வேகமாக கொடுத்துவிட்டு பள்ளிச் சிறார்களிடம் மரங்களின் மகோன்னதம் பற்றி விளக்கும் பண்பாளர்.

--அவரது பேரூந்து வழித்தடத்தில் இருக்கும் நான்கு பல்கலை மற்றும் பத்து கல்லுரிகளிலும் இவரை பின்பற்றும் பசுமை போராளிகள் மிகுந்து உள்ளனர்.

--இவ்வரிய பட்டத்தை வாங்கும் முதல் தமிழனை தமிழ் கூறும் நல்லுலகம் வாழ்த்தி மகிழ்கிறது--

Tuesday, June 17, 2008

கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சூழல் போராளியின் வெற்றிப் பேரிகை



பண்பாடு மற்றும் கலாச்சார தலைநகராம், நொய்யல் நாகரிகத் தொட்டில்
கோவையில் அரசுப் பேருந்தில் நடத்துனராகப் பணியாற்றும் பசுமைக் காவலர் 'ம.யோகநாதன்' அவ்ர்கள் தமிழகத்தின் 30 மாவட்டங்களில் 1980லிருந்து இதுவரை சுமார் 50,000 மரங்களை நட்டு "மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" என மனித சுமுதாயத்திற்கு ஆற்றிய பெரும்பணியினை பாராட்டி, அன்னாருக்கு ,பாரத்த்தின் துனை குடியரசுத்த்லைவர் ஹமித்அன்சாரி 5-06-2008 அன்று தலைநகர் டெல்லியில் உலக சுற்று சூழல் தினத்தில் 'சுற்றுச் சூழல் போராளி'(ECO WARRIOR)எனும் பட்டத்தை வழங்கி பெருமை செய்துள்ளார்கள்.

Friday, June 13, 2008

நேற்று..இன்று..நாளை..

Tuesday, June 10, 2008

Thursday, June 5, 2008

முதல்வர் அறிவித்த அளவுச் சாப்பாடு...

Wednesday, June 4, 2008

சிவப்பினுள் ஒரு சிவப்பு போராளி..