Friday, August 8, 2008

உலக வெப்பமேறல் - உலக வெம்மை - உலக வெப்பம் கூடுதல் - Global Warming


கடைசி எச்சரிக்கை அண்ணாச்சிக்களுக்கு..

முதலில் தாத்தாக்கள் காலம் பசுமை கொஞ்சும் கிராமங்கள், காற்றோட்டமான ஓட்டு வீடுகள்,எளிமையான் அரிக்கேன் விளக்கு வெளிச்சம், வெளியிடங்களுக்கு செல்ல வில்வண்டி

மனித உழைப்பு சார்ந்த இயற்கை விவசாயம்
கலப்படமற்ற வீரிய விதைகள் விளைச்சலோ அபாரம்!
உணவில் தன்னிறைவு.செய்யும் தொழில் சார்ந்த ஜாதி பிரிவுகள் இருந்த போதும், சண்டையில்லா சமரச சந்தன நறுமணம் தவழ்ந்த காலம்.

அடுத்தது அமைதி தாத்தாகளின் மகன்கள் காலம்..

மெல்ல மெல்ல அறிவியல் கண்டுபிடிப்புகளின் தாக்கம்.
கல்வி கேள்விகளின் நாகரிகத்தில் நல்ல வளர்ச்சி.

பகுத்தறிவு பிரச்சாரங்கள் மலர்ந்த நேரம்.

விவசாயத்தில் செயற்கை உரங்கள், இரசாயன பூச்சி கொல்லி மருந்துகள், இயந்திரங்கள் ஆகியவற்றின் படையெடுப்பு.

உணவு உற்பத்தி வாய்க்கும்-கைக்குமான நிலை

மத-ஜாதி-இன சண்டைகள் தோன்றி மனித உயிர்கள் காவு கொடுக்கபடல் தொடக்கம்.

இயற்கை சூழல் கெடத்தொடங்குகிறது. புதுப்புது நோய்களின் ஆலவட்டம்.

ஆங்கில மருந்துகளின் புற்றீசல் வளர்ச்சி.

ஓட்டு வீடுகள் கான்கிரிட் விடுகளாக உறுமாற்றம்.
வெளிச்சம் போச்சு, காற்றும் போச்சு, ஆரோக்கியமும் போச்சு..


போக்குவரத்தில் கரும்புகைகக்கும் வாகன தானியங்கி ஊர்திகளின் ஊர்வலங்கள்.
மனித நேயம் மெல்ல மெல்ல சுயநலத்தால் ருசிக்க படத்துவக்கம்.

கூட்டு குடும்பங்களின் சிதைவின் தொடக்கம்
அமைதி மறைந்து இருக்குமான் அசாதாரண சுழ்நிலை.

மின்விசிறி, தொலைக்காட்சி, தொலைபேசி, இருசக்கிரவாகனம் போன்ற வசதிப்படைத்தோரை போன பிறவியில் பூண்ணியம் பண்ணிய ஆத்மாக்கள் என பாராட்டபட்ட காலம்.

அடுத்து தாத்தாவின் பேரன்கள் வாழும் ஐ.டி காலம்..


பரப்பரப்பு நிறைந்தது..பாதுக்காப்பு அற்றது..பகட்டா மட்டும் தெரியுது..கைநிறைய வருமானம்..கவலையற்ற களிப்பு வாழ்வு..
கடனை உடனை வாங்கி கண்ணில் காணும் பொருட்களையெல்லாம் வாங்கிக் குவிக்கும் மனோபாவம்..

நடுத்தரவயது மக்களின் நிரந்திரமாக குடியேறிவிட்ட நச்சு பாம்புகளாம் சக்கரை வியாதி,இரத்தக் கொதிப்பு..
தண்ணீர் பாட்டீலோடு அலையும் மக்கள் ஒரு பக்கம், மூக்கு கவசத்துடன் தடதடக்கும் பூகை கக்கும்
வாகன தேரோட்டிகள்..

எந்த குண்டு எங்கு வெடிக்குமோ எனும் பதைபதைப்பு..சொந்த இனத்தையே துண்டு-துண்டாய் பிய்த்து எறியும் பயங்கரவாத்தின் கொடூங்கரங்கள்..

அடுத்த வீட்டுக்காரைன் பெயர் தெரியாத அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்க்கையின் தொடக்கம்.
நடுத்திரவர்க்கத்தின் மாதவருமானம் பெருக்கத்தால் வீட்டிற்கு இரண்டுக்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள்.
காலை நடைபயிற்சிக்கு கூட கார்களில் வரும் பருத்த தேக சொந்தங்கள்.

எங்கும் கன்சூமரிசம் எதிலும் கன்சூமரசியம்.

குடிக்கும் தண்ணீர் சாயப் பட்டறைகளால் கெட்டுப்போச்சு
ஆலைகள் வெளியிடும் நச்சுப் புகை
ஒவ்வாமை நோய்களின் ஆட்சி

சுவாசிக்கும் காற்று மாசுபட்டுப் போச்சு.

பூமிப்பந்தில் மேல்பரப்பின் வெப்பம் ஆண்டுக்கு ஆண்டுக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது.
சூரியனிமிருந்து மனித இனத்தைக் காக்க இயற்கை கொடுத்த் ஓசோன் அடுக்கில் ஓட்டை

இதனால்

1.திடீர் வெள்ளப் பெருக்கு
2,.சுழற்றி அடிக்கும் சூறாவளிகள்
3புரட்டிப் போடும் புயலகள்
4.க்டும் வறட்சி
5.குறைவான மழை
6.வெப்ப நோய்களின் படையெடுப்பு
7.உணவுப்பற்றாக்குறை
8.நிலப் பகுதியை முழுங்கும் கடல்களின் சீற்றம்.
9.பனிப்பாறைகள் வேகமாய் உருகும் தன்மை.
10.மனித இனமே அழியும் அபாயம்.


அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய


விழிப்புணர்வுக்காக இன்று ( 08-08-08) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார
விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.!








உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்!
ஒன்றுபடுவோம்!
போராடுவோம்!
தியாகம் செய்வோம்!

மனிதம் காப்போம்!
மானுடம் காப்போம்!
-
கோவை விஜய் - திருமலை
http://pugaippezhai.blogspot.com/