Thursday, July 24, 2008

கோவையில் தேசபிதாவின் மறுபிறப்பு...


நம் இந்திய தேசத்தில் ஒரு மாபெரும் கொடுமை. மனித கழிவுகளை தலையில் சுமக்கும் ஒரு பிரிவினர் இருந்த காலம். இந்தக் கொடுமையை நீக்க வேண்டும் என் மக்களுக்கு உணர்த்த நம் தேசப் பிதா காந்தி தனது கழிப்பறைகளை தானே சுத்தம் செய்தார். இது வரலாறு. இந்த கொடுமையை முழுவதும் நீக்க பாடுபட்டோர் பல உத்தமத் தலைவர்கள்.

உலர் களிப்பிடங்கள்( dry lavo) காலம் மெல்ல மறைந்து "flush out" கிராமம்,நகரம் எங்கும் வரத் தொடங்கின. இருந்த போதிலும் அந்த கழிப்பறைகளை சுத்தம் செய்ய வெளி ஆட்ளை உபயோகிக்கும் மணோபாவம் மட்டும் மாறின பாடில்லை.

தன் வீட்டு கழிப்பறையே சுத்தம் செய்ய யோசிக்கும் காலத்தில் பிறர் வீட்டு கழிப்பறைகளை சுத்தம் செய்து அதில் வரும் பணத்தை ஏழை அனாதை குழந்தைகளின் உணவுக்காவும்,உடைக்காவும்,கல்விக்காவும் செலவழிக்கும் ஒரு உத்தமர் லோகநாதன்-கோவையில் காந்தியின் மறு பிறப்பன்றோ!

ஆறுவரை படித்ததால் ஒரு தனியார் வெல்டிங் கம்பெனியில் வேலை. அதில் வரும் சம்பளம் அவர் குடும்ப அன்றாட செலவுக்கு.

வேலை நேரம் முடிந்ததும் கல்யாணமண்டபம், பொது இடங்கள், பிறர் வீடுகள் முதலியவ்ற்றில் உள்ள கழிபிடங்களை சுத்தம் செய்து அதில் வரும் பணத்தை ஏழை எளிய ஆதரவற்ற குழந்தையின் கல்விக்காக செலவ்ழித்துவருகிறார்.

கழிப்பறைகளை சுத்தம் செய்வதால் கிடக்கும் பணத்தை வங்கியில் சேமிப்பு கணக்கில் போட்டு ஆண்டு முடிந்ததும் பள்ளி ஆண்டு இறுதித் தேர்வில்( 10 th,12 th) அதிக மதிப்பெண்கள் பெற்ற சுமூகரீதியாக பின்தங்கிய சமுதாய குழந்தைகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் மூலம் கையேடுகளை வழங்குவதை வழக்கமாய் கொண்டுள்ளார் நம் லோகநாதன்
வீடு வீடாகச் சென்று மற்றவ்ர் உபயோகித்த பழைய துணிமணிகளை சேகரித்து ,அவரது வாழ்க்கை துணவி சலவை செய்து தர அதை அணாதை குழந்தைகளுக்கு அளித்து அகமகிழ்கிறார்.
இந்த தன்னல்மற்ற சமுதாயப் பணியை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருகிறார்..
இப்படி சில புண்ணியவான்கள் இருப்பதால் தான் ஏதோ கொஞ்சம் மழையும்,மனிதமும் இருக்கிறது.

அவரின் முகவரி..

திரு.லோகநாதன்
எஸ்.எம்.இன்ஜீனியரிங்,
697,ராமநாதபுரம்,
கோயம்புத்தூர்-45.

செல்- 99526 21150

Monday, July 21, 2008

சுருட்டிய சுனாமியின் பாதிப்புக்கு பின்..

Six Shores Sharing
One Ocean..
One Sky..
& One Language with Survival & Music...

2004 சுனாமியால் பாதிப்புக்குள்ளான சமுகத்தாரின் எண்ணங்கள் 'லயா' வின் இசை நயத்தில்...

ஸ்ரீலங்கா, இந்தியா, மியான்மர்,தாய்லாந்த்,இந்தோனேஷியா,மால்தீவிஸ்..... இந்த இசை கோர்வை வெளியிடப்ப்ட்ட ஆண்டு 2007...

இயற்கை இல்லையென்றால் 'இசை' ?

Friday, July 18, 2008

வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..!

தமிழக்த்தின் கலச்சாரம் மட்டும் பண்பாட்டு தலைநகராம் கொங்கு சீமை கோவையில் செட்டிப்பாளையம் பந்தய திடல்லில் நடந்த நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகன போட்டி பந்தய காட்சிகளின்..உங்கள் விஜயின் புகைபடப்பேழையின் புகழ் பாடும் கவிதை தொகுப்புகள்..

வந்து கண்டு களித்து கருத்துகளை தாங்கோண்ணா..

























பெட்ரோலின் விலை கண்ணாமூச்சி விளையாடும் நம் நாட்டுக்கு இந்த களிப்பு மோட்டார் பந்தயம் தேவையா சிந்திப்பீர்!

Thursday, July 10, 2008

அண்ணே! நீங்க மனசு வைச்சா இந்த பெட்ரோல் விலையை குறைச்சுடலாம்.அண்ணே



எங்கள் வீட்டிற்கு காலை உணவுக்கு ஒரு நாளைக்கு தேவையான முட்டைகள் இரண்டு.
தெரு முனையில் உள்ள திருநெல்வேலி அண்ணாச்சி பலசரக்கு கடையிலிருந்து(ஒரு டஜன் முட்டைகள் ஒரு வாரத்திற்கு காணாது எனவே) இரண்டு டஜன் முட்டைகள் வாங்குவது வழக்கம்.

வருட ஆரம்பத்தில் ஒரு டஜன் முட்டை ரூபாய் 10 க்கு கொடுத்து வந்த அண்ணாச்சி திடீரென ரூபாய் 15 கேட்டார்.முனங்கி கொண்டு கொடுத்த எனக்கு அடுத்த அடுத்த மாதங்களில் ஒரு டஜன் முட்டையின் விலையை 30 ரூபாய்க்கு என்று சொன்னதும் மயக்கமே வந்து விட்டது.


" என்ன அண்ணாச்சி இது அநியாயமாய் இருக்கு இப்படி விலை ஏற்றி கொண்டே செல்கிறீர்கள்". இது கடவுளுக்கே அடுக்குமா/.
அண்ணாச்சியின் பதில் காதில் நாராசமாய் வந்து விழுகிறது.
" நான் என்ன செய்ய சார் முட்டை வியாபாரி விலையை ஏற்றி விட்டார் அதை நான் உங்க கிட்த்தானே வாங்கமுடியும்,
எங்க புள்ளை குட்டிகள் உயிர் வாழா வேண்டாமா/ சொல்லு தம்பி என்றார்.

இதற்கிடையில் முட்டைவிலை ஏறியதால் சின்ன அளவில் முட்டை உற்பத்தி நிலையங்கள் நலிந்து போக, பெரிய பெரிய முட்டை பார்ம்கள் வைத்ததுதான் சட்டம் என ஆகிவிட்டது.
அவர்கள் முட்டை விலையை தங்கள் இஷ்டத்துக்கு ஏற்றி, உள்ளூர் டிஸ்ட்ரிபூட்டர்களுக்கு தர அது மறைமுகமாக அண்ணாச்சி மூலம் எங்கள் தலையில் வந்து விழுந்தது.

டிசம்பர் மாதம் முட்டை டஜன் 40 ரூபாய்க்கு எகிறியது காரணம் கேட்டால் கிறிஸ்துமஸ் கேக்கு செய்வத்ற்கு முட்டையின் தேவை அதிகம் என சொல்லப் பட்டது.

எங்கள் தெரு மகா சபை ஒரு ஞாயிறன்று கூடியது. இதற்கு கடிவாளம் போட என் ஆலோசனை ஏற்கப்படது ஒரு மனதாக.அதன் படி இன்றிலிருந்து ஒவ்வொருவரும் தினம் முட்டை உபயோகத்தை பாதியாக குறைத்து ,இரண்டு டஜன் முட்டை வாங்காமல் தேவையான அளவு அதாவ்து 2 அல்ல்து 3 முட்டை மட்டும் வாங்க ஆரம்பித்தோம்.

அண்ணாச்சி கடையில் முட்டைகளின் இருப்பு நாளாக நாளாக அதிகமாகிக் கொண்டே போனது.
டிஸ்டிரிபூட்டர் கிட்டங்கிகளில் முட்டைகள் மலை போல் குவியத் தொடங்கியதால் முட்டை உற்பத்தியாளர்களிடம் சரக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.ஆனால் கோழிக்கு இந்த விவகாரம் தெரியாமல் அது பாட்டுக்கு " என் கடன் பணி செய்து கிடப்பதே " என முட்டையிட்டுக் கொண்டெ இருந்தது .உற்பத்தியாளர் இடப் பற்றாக் குறையால் தவியாய் தவித்தார். டிஸ்ட்ரிபூட்டரின் வேலை ஆட்களோ, வேலை இல்லாமல், டல்லடிக்கு வியாபரம் என் வருவோர் போவோரிடம் சொல்லி சொல்லி ஓய்ந்து விட்டார்கள். அண்ணாச்சியோ முட்டை வியாபாரம் "டல்லுங்கோ" என் கன்னத்தில் கைவைத்து புலம்ப ஆரம்பித்து விட்டார்.


முட்டைகள் காலம் கடந்து கெட்டுப் போனாதால் அதை பூமியில் குழி தோண்டி புதைத்தார்கள் பண்னை உற்பத்தியாளர்கள்.ஆனாலும் விலை குறைக்க மனமில்லை.
நாங்களும் "விடாக் கண்டன் கொடாக் கண்டனாக ஒரு நாளின் தேவையில் பாதி அளவே முட்டை வாங்கிவர வேறு வழியில்லாமல் உற்பத்தியாளர்,டிஸ்ட்ரிபூட்டர்,மளிகைக்கடை அண்ணாச்சி மூவரும் உச்சி மாநாடு நடத்தி முட்டையின் விலையை பழைய ரூபாய் 10 க்கு/டஜன் கொண்டு வந்தார்கள்.

இந்த தாரக மந்திரத்தை நாம் பெட்ரோல் உபயோகத்திலும் கடைப் பிடிக்கவேண்டும்.
நம் கார்களுக்கோ,இருசக்கர வாகனங்களுக்கோ பெட்ரோல்/டீசல் பெட்ரோல் நிலையங்களில் போடும் போது தேவையான அளவில் பாதி மட்டும் போடவேண்டும்.வண்டியின் டாங்கை முழுவதும் நிரப்பாமல் பாதிஅள்வே நிரப்பவேண்டும்.வண்டியின் உபயோகத்தையும் குறைக்கவேண்டும்.

இப்படி செய்தால் பெட்ரோல் நிலையங்களில் பூமியின் அடியில் புதைக்கபாட்டுள்ள பெரிய டாங்குகள் காலியாகாச் சூழ்நிலை உருவாகும்.
பெட்ரோல் சேமிப்பு கிடங்குகளில் இடப் பற்றாக் குறை ஏற்படும்
பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்கள் கச்சா எண்ணேய் இருப்பு அதிகமாகிக் கொண்டெ போகும்
கச்சாஎண்ணெய் டாங்கர் கப்பல்களின் நெருக்கத்தால் துறை முகங்கள் திக்கு முக்காடும்.




முட்டை விலை விசயத்தில் நடந்து மாதிரி அதிசயம்
பெட்ரோல்/டீசல் விலை விசயத்திலும் நடக்கும்
அது உங்கள் கையில்.

பெட்ரோல் உப்யோகத்தை குறைப்போம்.
பெரிசுகளின் கொட்டத்தை அடக்குவோம்.

Wednesday, July 9, 2008

"என்னை வளர்த்த மனிதா, உன்னை அழி(ளி)ப்பேன் எளிதாய்"


வாய் பிளந்து மனித இனத்தை முழுங்க வரும் பிளாஸ்டிக் அரக்கனின் கோரத் தாண்டவம்.

பிளாஸ்டிக் பொருட்களை தாயரிப்பது எளிது.விலையோ மலிவு,கையில் எடுத்து செல்வது மிகவும் எளிது.வேலை முடிந்ததும் வெளியில் தூக்கிப் போடுவது அதை விட எளிது.

மனித குலத்தை அழிக்க புயலாய்,சுனாமியாய்,சூறாவழிக்காற்றாய் விஸ்வரூபம் எடுத்து எங்கும் வியாபித்திருக்கும் பாலிதீன் பைகள்


நம்மால் தூக்கிப் போடப்படும் பாலிதீன் பைகளின் சாம் ராஜ்யம் நீர்,நிலம், ஆகாயம் எங்கும் கொடிகட்டி பறப்பது யாவரும் அறிந்த ஒன்றே.

அழியா வரம் பெற்ற இந்த பாலிதின் பைகள் நீர் நிலைகளை,சுவாசிக்கும் காற்று மண்டலத்தை,பரந்த வான வெளியை மாசு படுத்தி பாழாக்கி கொண்டு இருப்பதை பற்றி பேசுகிறோம் ஆனால் அதை நிவர்த்தி செய்ய யாரும் முன்வரவில்லை.


உலக வெப்பமயமாதல் மற்றும் ஓசோன் படலத்தில் விழ்ந்த ஓட்டை எவ்வளவு பயங்கரமானாதோ
அதற்க்குச் சற்றும் வீரியம் குறந்தவரல்ல இந்த பகா சூர "பிளாஸ்டிக்"அரக்கன் "

காற்று, வெப்பம், சூரிய ஒளி ஆகியவற்றால் அழித்து மண்ணொடு மண்ணாக மக்கச் செய்யா முடியாச் சூழ்நிலையால் பரந்த பூமியின் நீர் நிலைகள் எல்லாம் வனப்பை இழ்க்கத் தொடங்கி விட்டன.எங்கெங்கு காணிலும் பாலிதீன் பையடா".அங்கே தாகத்துக்கு நீரருந்த வரும் கால் நடைகள் பலிகடகா ஆக்கப்படுகின்றன.கடல் வாழ் உயிரினங்களோ மூச்சு முட்டி மிதக்கின்றன.


ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இன்று மனித இனத்தின் ஆரோக்கியத்திற்கே பெரும் சவலாய்
கொக்கறிக்கிரது.

கண் கெடுவதற்கு முன் எப்படி சூரிய நமஸ்காரம் செய்வது.


1.முதலில் மிக மெல்லிய பாலிதீன்(ஒரு முறை உபயோகப் படுத்தும்)பைகளின் தயாரிப்பை நிறுத்த வேண்டும்.

2.துணிப்பை பைகளின் உபயோகத்தை அதிகரிக்க வேண்டும்

3.carry a bag, not carry bag இந்த தாரக மந்திரம் பூமியெங்கும் ஒலிக்க வேண்டும்.
4.பாலிதீன் பைகளின் தயாரிப்பில் உள்ள கம்பெனிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து அவரது வாழ்வுக்கு வழி வகை செய்வது அரசின் கடமை.

5.நம்மை முழுவது முழ்ங்கி ஏப்பம் விடுவதற்கு முன்னால் நாம் முந்தி "ப்ளாஸ்டிகின் உபயோகத்தை அறவே ஒழிப்போம்" என பிரச்சார இயக்கம் தொடங்குவோம்.


சுவாசிக்கும் காற்றும் கெட்டுப் போச்சு அண்ணே
சுற்றுச் சூழல் மாசு பட்டுப் போச்சு அண்ணே

குடிக்கும் தண்ணிரும் கெட்டுப் போச்சு அண்ணே
குடிகெடுக்கும் பாலிதீன் பையாலே இது அண்ணெ

கால்நடை யெல்லாம் கலங்கி பதறுது அண்ணே
காலன் முடிக்கும் முன்னே விழிப்போம் அண்ணே